உலகின் கடைசி வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கி கொல்லப்பட்டது.!

Read Time:3 Minute, 19 Second
Page Visited: 71
உலகின் கடைசி வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கி கொல்லப்பட்டது.!

உலகின் அரியவகை உயிரினங்களில் ஒன்றான வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனத்தின் கடைசிப் பெண் ஒட்டகச்சிவிங்கி கொல்லப்பட்டது.

அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் காடுகளில் வசித்து வருவது கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மொத்தம் மூன்று வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளே இந்த இனத்தில் இருந்து வந்தது. அவற்றைக் காண்பதற்காகவே உலகம் முழுவதும் பல சுற்றுலாப் பயணிகள் கென்யாவுக்கு வந்தனர்.

கென்யா நாட்டில் மட்டுமே காணப்படும் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி, கென்யா வனவிலங்கு சரணாலயத்தில் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட நிலையில், எலும்புக்கூடாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தாய் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும் இறந்து நான்கு மாத காலம் ஆகியிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இந்தச் சம்பவத்துக்குப் பின், உலகில் ஒரே ஒரு ஆண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி மட்டுமே எஞ்சியிருக்கிறது. அல்பினிசத்திலிருந்து சற்று வேறுபட்ட லூசிசம் (Leucism) எனப்படும் ஒரு மரபணு நிலையைக் கொண்டிருக்கும் இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகளின் தோல் பகுதியில் உள்ள செல்களில் நிறமி உருவாவதைத் தவிர்க்கிறது. ஆனால் கண்கள் போன்ற பிற உறுப்புகள் சாதாரண நிறத்திலேயே இருக்கும்.

https://twitter.com/therealkenyan_/status/1237347453055250432?s=08

“இது, ஒட்டுமொத்த கென்யாவுக்கும் சோகமான நாளாக அமைந்துள்ளது. உலகிலேயே எங்கள் நாட்டில் மட்டும்தான் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளைப் பராமரித்துவந்தோம். உலகில் உள்ள அனைத்து வனவிலங்கு பாதுகாவலர்களுக்கும் ஓர் அச்சுறுத்தல். அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் இன்னும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது” என்று தெரிவித்திருக்கிறார், கென்யா வனவிலங்கு சரணாலயத்தின் மேலாளரான மொஹம்மத் அகமத் நூர்.

கடந்த 30 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 சதவிகித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களாலும் கடத்தல்காரர்களாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அழிவின் விளிம்பிலிருந்த இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகள் தற்போது கொல்லப்பட்டது மூலம் அந்த இனத்தின் கடைசி உயிர் மட்டும் தற்போது ஆப்பிரிக்கக் காடுகளில் தனித்து விடப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %