இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..!

Read Time:3 Minute, 15 Second
Page Visited: 98
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..!

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற உலக வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் பதம் பார்க்க ஆரம்பித்தன, இது வரை இந்தியாவில் 4 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர். இவர்கள் டெல்லி, கர்நாடகம், மராட்டியம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேற்கு வங்காளம், பஞ்சாப், மராட்டிய மாநிலங்களில் புதியதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஆந்திர மாநிலங்களிலும் புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.

வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 236-ல் இருந்து 271 ஆக அதிகரித்து உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் பேசுகையில்,

கொரோனாவை தடுக்க பிரதான வழி சமூக விலகியிருத்தலே ஆகும். பிரதமர் மோடி மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்து உள்ளார். இந்த ஒருநாள் ஒத்துழைப்பு, வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க பயனுள்ளதாக அமையும்.

கொரோனா குறித்த சந்தேகங்களை மக்கள் 1075 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார். இவ்வாறு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

மேலும் 90 ரெயில்கள் ரத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரெயில்களில் முன்பதிவு குறைந்துவிட்டது. எனவே, மேலும் 90 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து மொத்தம் 245 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே அறிவித்து உள்ளது. அரசு ஆய்வுக்கூடங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், 14 தனியார் நிறுவனங்களும் இந்த வைரஸ் தொற்றை பரிசோதிப்பதற் கான உரிமங்களை பெற்று உள்ளன. இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோச் பரிசோதனை நிறுவனமும் அடங்கும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %