இந்தி பாடகருடன் நடிகை அமலாபால் 2-வது திருமணம்…

Read Time:2 Minute, 4 Second

தமிழில் மைனா படம் மூலம் பிரலமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த அமலாபால், ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்திருந்தார். தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டு பயலே-2 உள்பட பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் ஆடை படத்தில் உடைகள் எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமலாபாலுக்கும், இயக்குனர் விஜய்க்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் தனுஷ் தனது படத்தில் அமலாபாலை நடிக்க வைத்ததால், இல்லற வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இதனை மறுத்த அமலாபால், விவாகரத்து எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நடந்தது என்று கூறினார். சமீபத்தில் அமலாபாலும், இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இதற்கு அவர்கள் விளக்கம் எதுவும் சொல்லவில்லை. இந்தநிலையில், அமலாபால் பவ்னிந்தர் சிங் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த திருமண படங்களை வெளியிட்டார். ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார். இதன் மூலம் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.