இத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

Read Time:1 Minute, 30 Second

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், தொடர்ந்து உலகமெங்கும் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் உயிர்ப்பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 30 ஆக இருந்தது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை காட்டிலும், ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டு வௌகிறது. சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,248 ஆகும். ஆனால், இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 4,032 ஆகும்.

வெள்ளிக்கிழமை மட்டும் வைரஸ் பாதிப்புக்கு 627 பேர் உயிரிழந்து உள்ளனர். 5,986 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரையில் 47,021 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்பெயின் நாட்டிலும் 1002 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர். மெரிக்காவில் கொரோனா வைரசும் தன் ஆதிக்கத்தை விஸ்தரித்து வருகிறது. அங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொட்டது. 200 பேர் உயிரிழந்துள்ளனர்.