கொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-

Read Time:2 Minute, 54 Second

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுமக்கள் ஒன்றுகூடாமல் தனிமைப்படுத்துவதன் மூலம் மனிதர்கள் மூலமாக எளிதாக பரவும் வைரசை தடுக்கலாம். தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மார்ச் 31-ம் தேதி வரை வெளியில் வருவதை கூடியவரை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன்படி இந்தியா முழுவதும் இன்று மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா முழுவதும் 75 மாவட்டங்கள் மார்ச் 31-ம் தேதி வரையில் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்களின் நகர்வை தடுக்கும் வகையில் கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களும் இந்த பட்டியலில் இடம்பெறுகிறது.

75 மாவட்டங்கள் விபரம்:-

மாநிலம் / யூனியன் பிரதேசங்கள்மாவட்டங்கள்
தமிழகம்சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம்
ஆந்திர பிரதேசம்பிரகாசம், விஜயவாடா, விசாகப்பட்டிணம்
தெலுங்கானாபத்ராதிரி கோதகுடம், ஐதராபாத், மெத்சாய், ரங்கா ரெட்டி, சன்கா ரெட்டி,
கர்நாடகாபெங்களூரு, சிக்கபல்லபுரா, மைசூர், குடகு, கலபுர்கி
கேரளாஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், மல்லபுரம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர்.
புதுச்சேரிமாஹே
சண்டிகர்சண்டிகர்
சத்தீஸ்கர்ராய்ப்பூர்
டெல்லிமத்திய, கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு டெல்லி மாவட்டங்கள்
ஹரியாணாபரீதாபாத், சோனிபட், பஞ்ச்குலா, பானிபட், குர்கிராம்
குஜராத்கட்ச், ராஜ்கோட், காந்திநகர், சூரத், வதோதரா, அகமதாபாத்
இமாச்சல்கங்கிரா
லடாக்கார்கில், லே
ம. பி.ஜபல்பூர்
மகாராஷ்டிராஅகமதுநகர், அவுரங்காபாத், மும்பை, நாக்பூர், புனே, ரத்னகிரி, ராய்கட், யவத்மால், தானே, மும்பை புறநகர்
ஒடிசாகுத்ரா
பஞ்சாப்ஹோசியாபூர், எஸ்ஏஎஸ் நகர், எஸ்பிஎஸ்நகர்
ராஜஸ்தான்பில்வாரா, ஜுனிகுன்ஹா, சிகார், ஜெய்பூ
உ. பி.ஆக்ரா, ஜி. பி. நகர், காசியாபாத், வாரணாசி
உத்தரகண்ட்டேராடூன்
மேற்குவங்கம்கொல்கத்தா, 24 பர்கானா