இத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு

Read Time:1 Minute, 23 Second

சீனாவில் தோன்றி சர்வதேச நாடுகளை அலறச்செய்து வரும் கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கையும், சாவு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித குலமும் செய்வதறியாது திகைத்து வருகிறது.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் தனது வேலையை தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இந்த வைரசால் செத்து மடிகின்றனர். அங்கு உயிரிழப்பு சீனாவில் இருந்ததைவிடவும் அதிகமாக உள்ளது.

அங்கு மொத்த பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து விட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அதிகரித்து உள்ளது. ஒரேநாளில் 793 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 4,825 ஆக உயர்ந்து உள்ளது. இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 47,021-ல் இருந்து 53,578 ஆக உயர்ந்துள்ளது.