கொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு

Read Time:1 Minute, 24 Second

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பை தடுக்க அரசுக்கள் தரப்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பால் எல்ஐசி காப்பீடு எடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் காப்பீடு ப்ரீமியம் கட்டணத்தை உரிய தேதியில் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.

இந்நிலையில் பாலிசிதாரர்களுக்காக புதிய சலுகையை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா வைரஸ் நோய் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாலிசிதாரர்களுக்கு சலுகையை வழங்குகிறோம். பாலிசிதாரர்கள் அனைவரும் தங்கள் பாலிசியின் ப்ரீமியம் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசமாக ஏப்ரல் 15 வரை வழங்கப்படுகிறது. ஆன்லைனில் செலுத்த முடியாத வாடிக்கையாளர்கள், முகவர்களிடம் வழங்க முடியாத வாடிக்கையாளர்கள், இந்த சலுகையை பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.