கொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுக்கள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா விவகாரத்தில் விதிக்கப்பட்டுள்ள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். வழிகாட்டுதல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா விவகாரத்தில், வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா குறித்த அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டாலும் வெளிநாட்டுக்கு சென்று வந்த சில பயணிகள், அரசின் சுய தனிமைப்படுத்தல் உத்தரவை மீறுகின்றனர். தனிமைப்படுத்தலை மீறி, சமுதாய பரவலுக்குக்கான காரணியாக மாறுகின்றனர்.
இத்தகைய நபர்களை கண்டுபிடிக்க அவர்களின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Next Post

கொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு

Mon Mar 23 , 2020
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பை தடுக்க அரசுக்கள் தரப்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பால் எல்ஐசி காப்பீடு எடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் காப்பீடு ப்ரீமியம் கட்டணத்தை உரிய தேதியில் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் பாலிசிதாரர்களுக்காக புதிய சலுகையை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா வைரஸ் நோய் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை