அமெரிக்காவில் கொரோனாவிற்கு 541 பேர் பலி… 42,663 பேர் பாதிப்பு; புதிய மருத்துவமனைகளை கட்டும் பணி தீவிரம்

Read Time:3 Minute, 59 Second
Page Visited: 78
அமெரிக்காவில் கொரோனாவிற்கு 541 பேர் பலி… 42,663 பேர் பாதிப்பு; புதிய மருத்துவமனைகளை கட்டும் பணி தீவிரம்

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவையும் பதம் பார்க்கிறது. அமெரிக்காவில் கொடிய கொரோனா வைரசிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் முதலாவதாக ஜனவரி 21-ம் தேதி சீனாவிலிருந்து திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 541 ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக நியூயார்க்கில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் 157, வாஷிங்டனில் 110, லூசியானாவில் 34 பேர் இறந்துள்ளனர். இதைப்போல வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களிலும் 20 ஆயிரம் நோயாளிகளை தாண்டி நியூயார்க்தான் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு தீவிர கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து வருகிறது. அங்கும் 3-ல் ஒரு பங்கு மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ள நியூயார்க்கில் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே மருத்துவ உபகரணங்கள் இருக்கும் எனவும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக கிடைக்காவிட்டால் மக்கள் மரணத்தையே தழுவுவார்கள் எனவும் நியூயார்க் மேயர் பில் தே பிளாசியோ கூறியுள்ளார். இதைப்போல கலிபோர்னியா மாகாணத்திலும் வைரஸ் தொற்று அதிகரித்து இருப்பதை தொடர்ந்து, அந்த மாகாணத்தில் மாபெரும் பேரிடராக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்புக்கு கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் பகுதிகளில் கொரோனா தொற்றை மாபெரும் பேரிடராக டொனால்டு டிரம்ப் அறிவித்து உள்ளார். இந்த மாகாணங்களுக்கு அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக கூறிய டிரம்ப், நியூயார்க், கலிபோர்னியா மாகாணங்களில் முறையே 1000, 2000 படுக்கை மருத்துவமனைகளை அமைக்கவும் தேசிய அவசர கால மேலாண்மை முகமைக்கு உத்தரவிட்டார். இதைப்போல வாஷிங்டனில் 3 பெரிய மருத்துவ நிலையங்களும், 4 சிறிய மருத்துவ நிலையங்களும் உருவாக்கவும் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இந்த 3 மாகாணங்களிலும் தேசிய பாதுகாப்பு படையினரை நிறுத்த ஒப்புதல் வழங்கியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %