கொரோனா வைரஸ்: ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி..!

Read Time:2 Minute, 0 Second
Page Visited: 91
கொரோனா வைரஸ்: ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி..!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஊரடங்கு மற்றும் 144 தடை அமல்படுத்துவதற்கு முன் முதற்கட்டமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை மூடப்பட்டன. அதன் காரணமாக அனைத்து சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 19ஆம் தேதியிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. படப்பிடிப்பு ரத்தால் ஆயிரக்கணக்கான திரைப்பட தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இருபத்தி ஐந்தாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பத்தாயிரம் பேர் பாதிக்கப்படுவதாக, ‘பெப்சி’ சம்மேளனத்தின் தலைவர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.

மேலும் தினக்கூலியாக இருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும்படி, ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனையடுத்து நடிகர் சிவகுமார், அவருடைய மகன்கள் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்கள். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %