தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; மதுரையில் சமூக பரவல்?

Read Time:3 Minute, 37 Second
Page Visited: 275
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; மதுரையில் சமூக பரவல்?

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தன்னுடைய வீரியத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் ஏற்கனவே 9 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புதிதாக 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

லண்டனில் இருந்து சென்னை வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது வாலிபர், திருப்பூரை சேர்ந்த 48 வயது நபர், மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயது நபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதில் புரசைவாக்கத்தை சேர்ந்த வாலிபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். திருப்பூரை சேர்ந்தவர் கோவை ஈ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 12,519 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்து உள்ளார். மருத்துவ பணியாளர்களுக்காக 60 லட்சம் முகக்கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. இன்னும் 1 கோடி அளவில் முகக்கவசங்கள் வாங்கப்பட உள்ளன. அதேபோல 500 வெண்டிலேட்டர் கருவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா தொற்று சிகிச்சைக்கான தனி வார்டு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள்ளார்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 48 வயது நபர், வெளிநாடுகளுக்கு சென்றதாக எந்தஒரு பயண வரலாறும் இல்லை. பிற மாநிலங்களுக்கும் அவர் செல்லவில்லை. அவர் வெளிநாட்டுக்கு சென்று வந்த யாரையாவது சந்தித்தாரா? என்பது தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர் கடந்த சில நாட்களாக சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டுள்ளார், மசுதிக்கும் சென்றுள்ளார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரை சந்தித்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை நபருக்கு உள்ளூரிலே வைரஸ் பரவியுள்ளதால் சமூக பரவலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %