கொரோனா வைரசினால் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக ஆபத்து உள்ளதா…?

Read Time:8 Minute, 54 Second

கர்ப்பிணிப் பெண்களுக்கு COVID 19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கங்களை புரிந்துகொள்ள தற்போது ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதுதொடர்பான தரவுகள் குறைவாகவே உள்ளது. ஆனால் தற்போது அவர்களுக்கு பொது மக்களை விட கடுமையான நோய்க்கு அதிக ஆபத்து உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

இருப்பினும் அவர்களின் உடலிலும் நோயெதிர்ப்பு மண்டலத்திலும் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, கர்ப்பிணிப் பெண்கள் சில சுவாச நோய்த்தொற்றுகளால் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே, அவர்கள் COVID-19 க்கு எதிராக தங்களை காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கைகள் எடுப்பது முக்கியம், மேலும் சாத்தியமான அறிகுறிகளை (காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் உட்பட) தங்கள் மருத்துவரிடம் செல்லவும்.

எங்களுக்கு இதுதொடர்பான சான்றுகள் கிடைக்கும்போது அதன் தகவல்களையும் ஆலோசனையையும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து தகவல்களை வெளியிடுவோம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.


நான் கர்ப்பமாக இருக்கிறேன். COVID-19-க்கு எதிராக நான் எவ்வாறு என்னை பாதுகாக்க முடியும்?

COVID-19 தொற்றுநோயை தவிர்ப்பதற்கு கர்ப்பிணிப் பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

* ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியை கொண்டு கையை சுத்தம் செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை அடிக்கடி கழுவுதல் பயனளிக்கும்.

* உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இடைவெளியை வைத்திருங்கள். நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

* கைகளால் உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிர்த்துவிடுங்கள்.

* சுவாச சுகாதாரம் பயிற்சியை மேற்கொள்ளல் வேண்டும் இருமும்போதும், தும்மும்போதும் உங்கள் கைகளை வளைத்து அதில் திசுக்கள் படும்படியாக செய்யுங்கள். உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடுவது இதன் பொருளாகும். பின்னர் திசுக்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.

உங்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், ஆரம்பத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள். உங்கள் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளை பின்பற்றவும்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சமீபத்தில் பிரசவித்த பெண்கள், COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் உட்படவர்கள் வழக்கமான பரிசோதனையில் கலந்து கொள்ள வேண்டும்.


கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பரிசோதிக்கப்பட வேண்டுமா?

கொரோனா வைரஸ் சோதனை நெறிமுறைகள் மற்றும் தகுதி நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து மாறுபடும். இருப்பினும், COVID-19 அறிகுறிகளை கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது WHO பரிந்துரையாகும். அவர்களிடம் COVID-19 இருந்தால் அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படலாம்.


தாயிடம் இருந்து வயிற்றிலிருக்கும் அல்லது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் செல்லுமா?

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தை அல்லது பிறந்த குழந்தைக்கு வைரஸ் செல்ல முடியுமா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இன்றுவரை, அம்னோடிக் திரவம் அல்லது தாய்ப்பாலின் மாதிரிகளில் வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை.


கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது என்ன விதமான கவனிப்பு இருக்க வேண்டும்?

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அல்லது பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்தின் போதும், அதற்கு பிறகும் உயர்தர பராமரிப்புக்கான உரிமை இருக்கிறது. பாதுகாப்பான பிரசவ அனுபவத்தில் பின்வருவன அடங்கும்:

மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவது;
பிரசவத்தின்போது விருப்பமான ஒரு துணை இருப்பது;
மகப்பேறு ஊழியர்களால் தெளிவான தொடர்பு;
பொருத்தமான வலி நிவாரண உத்திகள்:
பணியாளர்கள் இருத்தல் மற்றும் பிரசவிக்கும் நிலையை தேர்வு செய்தல்;

COVID-19 சந்தேகிக்கப்பட்டால் அல்லது உறுதிப்படுத்தப்பட்டால் சுகாதார ஊழியர்கள் தமக்கும் மற்றவர்களுக்கும் தொற்று அபாயங்களை குறைக்க தகுந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதில் கையை சுகாதாரமாக வைப்பது, மற்றும் கையுறைகள், கவுன் மற்றும் மருத்துவ முகக்கவசம் போன்ற பாதுகாப்பு ஆடைகளை பயன்படுத்துதல் வேண்டும்.


கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் கர்ப்பிணிப் பெண் சிசேரியன் முறையில்தான் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டுமா?

இல்லை. WHO உலக சுகாதார அமைப்பு ஆலோசனை என்னவென்றால், மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்படும்போது மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும். குழந்தை பிறக்கும் முறை தனிப்பயனாக்கப்பட வேண்டும் மற்றும் மகப்பேறியல் அறிகுறிகளுடன் ஒரு பெண்ணின் விருப்பங்களை அடிப்படையாக கொள்ள வேண்டும்.


COVID-19 கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பெண் தாய்ப்பால் கொடுக்க முடியுமா?

ஆம். COVID-19 உள்ள பெண்கள் அவ்வாறு செய்ய விரும்பினால் தாய்ப்பால் கொடுக்கலாம். அவர்கள் பின்பற்ற வேண்டியவை:-

குழந்தைக்கு பாலூட்டும்போது சுகாதார சுவாசத்தை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் அணிந்துக்கொள்வது நல்லது.

குழந்தையை தொடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவுங்கள்.

அவர்கள் தொட்ட பகுதிகளை வழக்கமாக சுத்தம் செய்ய வேண்டும்.


எனக்கு COVID-19 கொரோனா வைரஸ் இருந்தால் புதிதாக பிறந்த குழந்தையை தொட்டு தூக்கலாமா?

ஆம். நெருங்கிய தொடர்பு மற்றும் பிரத்தியேக தாய்ப்பால் ஒரு குழந்தை வளர உதவுகிறது. உங்கள் குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்னும் உங்கள் கைகளை கழுவ வேண்டும், மேலும் அனைத்து மேற்பரப்புகளையும் ( அறையில் உங்கள் கை படும் பகுதிகளை) சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


எனக்கு COVID-19 கொரோனா வைரஸ் உள்ளது, மேலும் எனது குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுப்பதில் எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் என்ன செய்யலாம்?

COVID-19 அல்லது பிற சிக்கல்களால் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க நீங்கள் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் பாதுகாப்பாக வழங்குவதற்கு உங்களுக்கு தேவையான ஆதரவு நடவடிக்கையை எடுக்க ஆதரவளிக்க வேண்டும், கிடைக்கக்கூடிய மற்றும் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அந்நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதில் பின்வருவன அடங்கும்:

* மார்பிலிருந்து பாலை வெளியே எடுக்கலாம்
* தாய்பால் நன்கொடையாக வழங்குபவர்கள் மூலமாகவும் வழங்கலாம்.

தகவல்: உலக சுகாதார அமைப்பு