இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது

Read Time:2 Minute, 22 Second

இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்து உள்ளது. மராட்டிய மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 606 ஆக உயர்ந்துள்ளது, அவர்களில் 43 பேர் வெளிநாட்டினர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா வைரசுக்கு பத்து இறப்புகள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று மாலை 21 நாட்கள் நாடுதழுவிய முழு அடைப்பை அறிவித்தார். மராட்டிய மாநிலத்தில் அதிகமாக 128 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. கேரளாவில்109 பேருக்கு பாதிப்பு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய யாத்ரீக நகரமான உஜ்ஜைனை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் புதன்கிழமை பிற்பகல் இறந்துள்ளார்.

இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூரில் புதன்கிழமை வைரஸ் பாதிப்பு காணப்பட்டதால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் திடீரென அதிகரித்துள்ளது. இந்தூரில் இருந்து நான்கு பேருக்கும், உஜ்ஜைனிலிருந்து ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியது. அங்கு, மொத்தமாக வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 உயர்ந்துள்ளது. மாநில தலைநகர் போபாலிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தரவின்படி மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:-
Andhra Pradesh 9

Bihar 4

Chhattisgarh 1

Delhi 31

Gujarat 38

Haryana 28

Himachal Pradesh 3

Karnataka 41

Kerala 109

Madhya Pradesh 14

Maharashtra 128

Odisha 2

Puducherry 1

Punjab 29

Rajasthan 36

Tamil Nadu 18

Telangana 35

Chandigarh 7

Jammu and Kashmir 7

Ladakh 13

Uttar Pradesh 37

Uttarakhand 4

West Bengal 9