அமெரிக்காவில் மையமாகும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு

Read Time:3 Minute, 14 Second
Page Visited: 77
அமெரிக்காவில் மையமாகும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவிவருகிறது.

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். திங்கள் கிழமை ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்து உள்ளது. 50 ஆயிரம் பேர் வரையில் கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

அங்குள்ள பிரபல நகரமான நியூயார்க்கில் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகும் 2 பேரில் ஒருவர் நியூயார்க்கை சேர்ந்தவராக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வருகிற நாட்களில் நியூயார்க் நகரில் பலியாவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ, “கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் நியூயார்க் நகரம் இந்த தொற்றுநோய் தாக்குதலின் மையப்பகுதியாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவில் முக்கிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளான முகக்கவசம், கை கழுவும் திரவம் (சானிடைசர்) ஆகியவற்றை பதுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.

டொனால்டு டிரம்ப் கூறும்போது, முக்கிய மருந்துகள், பாதுகாப்பு கருவிகளை கூடுதல் விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது அரசு கடும் நடவடிக்கையை எடுக்கும். எளிதில் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க குடிமக்களின் துன்பத்தை பயன்படுத்தி யாரும் ஆதாயம் அடைவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றார். அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், அந்த பகுதிகளுக்கு முக்கிய மருந்துகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரானை அடுத்து அமெரிக்காவும் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையமாகியுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %