கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றிப்பெற வேண்டும் – பிரதமர் மோடி

Read Time:1 Minute, 6 Second

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பின்னர் நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசி மக்களுடன் காணொலி காட்சி மூலமாக பிரதமர் பேசினார். அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் நோயாளிகளை கையாளும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களை மக்கள் ஒதுக்கி வைப்பது வேதனை அளிக்கிறது.

கொரோனா வைரசுக்கு ஏழை, பணக்காரன் தெரியாது. எனவே மக்கள் வீட்டிலேயே இருங்கள். மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனா வைரசுக்கு எதிரான போர் 21 நாட்கள் நடக்கிறது. இந்த போரில் வெற்றி பெறுவதே நம் நோக்கமாகும் எனக் கூறினார்.