கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் உலக தலைவர்….

Read Time:2 Minute, 26 Second

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவம் கோர முகத்தை காட்டிவருகிறது.

இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,658 ஆக உயர்ந்துள்ளது. 578 பேர் பலியாகி உள்ளனர். நிலமை மோசமடைந்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து நாட்டில் 3 வாரங்களுக்கு முழு அடைப்பை அறிவித்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன. தற்போது கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. தற்போது, நானே என்னை சுய தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். எனினும், அரசு நடவடிக்கைகளை காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்துவேன். நான் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொரோனாவை வென்று காட்டுவோம். வீட்டிலேயே இருப்போம் #StayHomeSaveLives”என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரிட்டன் அரண்மனை ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ராணி எலிசபெத் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் உலக நாடுகளிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

போரிஸ் ஜான்சன் விரைந்து குணம் அடைய பிராத்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். நீங்கள் போராளி, சவால்களை வென்று வருவீர்கள். உங்களுடைய உடல் நலத்திற்காகவும், ஆரோக்கியமான இங்கிலாந்தை உறுதிசெய்யவும் பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.