இரண்டே நாளில் 1,00,000 பேரை தொற்றிய கொரோனா வைரஸ்…! உலகம் முழுவதும் 28,377 பேர் உயிரிழப்பு

Read Time:1 Minute, 7 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

கொரோனா வைரசுக்கு இதுவரையில் உலகம் முழுவதும் 617,351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த இரண்டே நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதுவரையில் கொரோனா வைரசுக்கு 28,377 பேர் உயிரிழந்து உள்ளனர். 137,336 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இத்தாலி, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மிகவும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

அமெரிக்காவில் அதிகப்பட்சமாக 104,277 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு, 1,704 பேர் உயிரிழந்து உள்ளனர். இத்தாலியில் வைரஸ் பாதிப்புக்கு 9,134 பேர் உயிரிழந்து உள்ளனர். 86,498 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.