கொரோனா வைரஸ் பாதிப்பு: ஊரடங்கு காரணமாக ஆணுறை பற்றாக்குறை நீடிக்கிறது…!

Read Time:4 Minute, 39 Second

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு நிலை காணப்படுவதால் தொழில்துறைகள் முடங்கியது. கருத்தடை சாதனமான ஆணுறை உற்பத்தியையும் நிறுத்தும் நிலை ஏற்பட்டது. தற்போது, உலகளவில் ஆணுறைகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக உலகின் மிகப்பெரிய ஆணுறைகள் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.

மலேசியாவின் Karex Bhd நிறுவனம் உலகளவில் பயன்படுத்தும் ஒவ்வொரு ஐந்து ஆணுறைகளிலும் ஒன்றை உருவாக்குகிறது. மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசாங்கம் விதித்த முழு அடைப்பு காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக அந்நிறுவனத்தின் மூன்று மலேசிய தொழிற்சாலைகளில் இருந்து ஒரு ஆணுறை கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

ஏற்கனவே 100 மில்லியன் ஆணுறைகளின் பற்றாக்குறை உலக அளவில் இருக்கிறது; பொதுவாக டூரெக்ஸ் போன்ற பிராண்டுகள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது; இவை பிரிட்டனின் தேசிய சுகாதார மையம் NHS போன்ற அரசாங்க சுகாதார அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது; ஐ.நா. மக்கள் தொகை நிதியிலிருந்து உதவித்திட்டங்களால் விநியோகிக்கப்படுகிறது. மலேசியாவின் Karex Bhd நிறுவனம் வெள்ளிக்கிழமை உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான தொழில்களுக்கான சிறப்பு விலக்கின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதனுடைய உற்பத்தி சுமார் 50 சதவிதம் மட்டும் நடக்கிறது என தெரிவிக்கிறது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோ மியா கியாட் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஜம்ப்ஸ்டார்ட் தொழிற்சாலைகளுக்கு உற்பத்திக்கு நேரம் எடுக்கும், பாதி திறனில் தேவையை நிர்வர்த்தி செய்ய நாங்கள் போராடுவோம் எனக் கூறியுள்ளார். ஆணுறைகளின் உலகளாவிய பற்றாக்குறையை நாங்கள் காணப்போகிறோம், இது பயமானதாக இருக்க போகிறது. ஆப்பிரிக்காவில் ஆழமான மனிதாபிமான திட்டங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். அங்கு பற்றாக்குறை இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதமாக இருக்காது, மாதங்களாக செல்லும் என்பது எனது கவலையாகும்.

தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரசினால் மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்று மலேசியா, இங்கு 2,161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. 26 பேர் இறந்துள்ளனர். ஏப்ரல் 14-ம் தேதிவரையில் அங்கு முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆணுறை உற்பத்தி செய்யும் மற்ற முக்கிய நாடுகளான சீனா, கொரோனா வைரஸ் பரவியதால் பரவலான தொழிற்சாலை பணிநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது, மற்றும் இந்தியா, தாய்லாந்து ஆகியவை இப்போது மட்டுமே தொற்றுநோயை எதிர்க்கொண்டுள்ளன. இதுபோக மருத்துவ கையுறைகள் போன்ற பிற முக்கியமான பொருட்கள் தயாரிப்பாளர்களும் மலேசியாவில் தங்கள் நடவடிக்கைகளில் இடையூறுகளை எதிர்க்கொண்டுள்ளனர்.

டூரெக்ஸின் செய்தித் தொடர்பாளர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள இ-மெயில் பதிலில், உற்பத்தி செயல்பாடுகள் இயல்பாகவே தொடர்கின்றன. மேலும், நிறுவனம் எந்தவொரு விநியோக பற்றாக்குறையையும் சந்திக்கவில்லை. எங்கள் நுகர்வோருக்கு, அவர்களில் பலர் கடைகளை அணுக முடியாது, எங்கள் டூரெக்ஸ் ஆன்-லைன் கடைகள் வணிகத்திற்காக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் ஆணுறைகளுக்கான தேவை இன்னும் வலுவாக உள்ளது, அது விரும்புகிறதோ; இல்லையோ, அது இன்னும் அவசியம். இந்த மிகவும் நிச்சயமற்ற நிலையில், மக்கள் குழந்தைகளை பெற திட்டமிடவில்லை என கோ மியா கியாட் கூறியுள்ளார்.