தொழிலாளர்கள் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்வதை தடுத்து நிறுத்துங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Read Time:4 Minute, 2 Second
Page Visited: 51
தொழிலாளர்கள் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்வதை தடுத்து நிறுத்துங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு  உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியநிலையில் அதனை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் முடங்கியது. வயல்களில், ஓட்டல்களில், கடைகளில் வேலைசெய்து வந்த கூலித்தொழிலாளர்களும் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு போய் விடுமாறு வேலைக்கு அமர்த்தியவர்கள் கேட்கிறார்கள். இதனால் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் வாகன வசதிகள் இல்லாததால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் உணவின்றி, குடிக்க தண்ணீர்கூட இன்றி கால்நடையாக நடந்து செல்கிற அவலநிலை இருக்கிறது.

ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு நடந்து செல்லும் பரிதாப நிலை இருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இப்படி தொழிலாளர்கள் கூட்டமாக வெளியேறுவதை தடுத்து நிறுத்தும்படி மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில்:- இடம் பெயர்ந்து வந்த விவசாய கூலி தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமாக வெளியேற்றப்பட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

இது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வழியாக அமையும். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. பாதிப்புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்கள் குழுக்களுக்கு தேவையான இலவச உணவுதானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், அரசாங்கம் எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

மேலும், ஓட்டல்களும், வாடகை கட்டிடங்களும், விடுதிகளும் தொடர்ந்து செயல்படும் விதத்தில், அவற்றுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அப்போதுதான், அரசு பிறப்பித்த தடை உத்தரவை பின்பற்றி மாணவர்களும், பணிபுரியும் பெண்கள் விடுதிகளில் தங்கி இருப்பவர்களும், தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள இடங்களில் தொடர்வார்கள் என்றும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %