உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது

Read Time:1 Minute, 34 Second

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் மக்கள் அதிகமாக உயிரிழந்து வருகிறார்கள். இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியுள்ளது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர்.

உலக அளவில் கொரோனாவினால் அதிகமான உயிரிழப்பு பதிவான நாடுகள் பட்டியல்:-

இத்தாலி

பாதிப்பு – 97,689
உயிரிழப்பு – 10,779


ஸ்பெயின்

பாதிப்பு – 80,110
உயிரிழப்பு – 6,803


சீனா

பாதிப்பு – 81,470
உயிரிழப்பு – 3,304


ஈரான்

பாதிப்பு – 38,309
உயிரிழப்பு – 2,378


பிரான்ஸ்

பாதிப்பு – 40,174
உயிரிழப்பு – 2,606


அமெரிக்கா

பாதிப்பு – 142,735
உயிரிழப்பு – 2,488


இங்கிலாந்து

பாதிப்பு – 19,522
உயிரிழப்பு – 1,228


நெதர்லாந்து

பாதிப்பு – 10,866
உயிரிழப்பு – 771


ஜெர்மனி

பாதிப்பு – 62,435
உயிரிழப்பு – 541


பெல்ஜியம்

பாதிப்பு – 10,836
உயிரிழப்பு – 431