ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…!

Read Time:2 Minute, 52 Second

சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளை கொரோனா மிகவும் வேகமாக வேட்டையாடி வருகிறது. இவ்வரிசையில் வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தையும், ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தவர்கள் 7000 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. இதற்கிடையே எங்கள் நாட்டில் பாதிப்பு குறைந்துவிட்டது என கூறும் சீனா, கொரோனா கண்டுபிடிப்பு இயந்திரங்கள், முகக்கவசங்கள், கையுறைகள் என தொழிலை வேகமாக விஸ்தரித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் இவற்றின் தரம் பெரும் கேள்விக்குறியதாகியுள்ளது. ஏற்கனவே கொரோனா உயிரை குடித்துவரும் நிலையில் சீனா வழங்கிய கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு சாதனங்களின் தரம் மேலும் வைரஸ் பரவலுக்கு காரணமாகியிருக்கிறது.

சீனா வழங்கிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு இயந்திரம் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை உண்மையில் அடையாளம் காட்டவில்லை என ஸ்பெயின் கூறியுள்ளது. இதனையடுத்து சீனா வழங்கிய அனைத்து டெஸ்ட்டிங் இயந்திரங்களையும் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. ஸ்பெயினின் சுகாதாரதுறை இயக்குனர் பெர்னாண்டோ சைமன், சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 9,000 சோதனை கருவிகள் தரமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவற்றை திருப்பி அளிக்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம். இதேபோன்ற நடவடிக்கையை பிற ஐரோப்பிய நாடுகளும் எடுத்து வருகிறது.

சீனாவின் இயந்திரம் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் தோல்வியை தழுவுவதால், வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. செக்குடியரசு, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் சீனா வழங்கிய இயந்திரம் சரியான முடிவுகளை தெரிவிப்பது இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே வைரஸ் பரவல் விவகாரத்தில் சீன விமர்சனங்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில் தரமற்ற இயந்திரங்களை வழங்கிய விவகாரத்தில் மேலும் கடினமான விமர்சனங்களை எதிர்க்கொண்டுள்ளது.