அமெரிக்காவுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கப்பட்ட அம்பிகா யானை கருணைக்கொலை!

Read Time:3 Minute, 0 Second
Page Visited: 78
அமெரிக்காவுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கப்பட்ட அம்பிகா யானை கருணைக்கொலை!

அமெரிக்காவிற்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கிய யானை, 72 வயதில் வாஷிங்டன் உயிரியல் பூங்காவில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு 1961-ம் ஆண்டு இந்தியா ஒரு குட்டி யானையை அன்பளிப்பாக வழங்கியது. இந்திய குழந்தைகள் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அந்த யானை ‘அம்பிகா’ என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் குடகுமலையில் 1948-ம் ஆண்டு அம்பிகா பிறந்தது. 8 வயதுவரையில் மரத்தடிகளை வனப்பகுதியில் இருந்து இழுத்து வரும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டது.

பின்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சுமித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவில் அம்பிகா வளர்க்கப்பட்டது. பூங்காவிற்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் அம்பிகா ஈர்த்து வந்தது.

72 வயதை எட்டியதால் முதுமையின் காரணமாக சமீபத்தில் யானை நோய்வாய்ப்பட்டதுடன் அவதியும் பட்டு வந்தது. அம்பிகாவின் உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு பூரண ஒத்துழைப்பு தராததால் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் வருத்தம் அடைந்தனர். இதனால் வேறு வழியில்லாமல் கருணைக்கொலை செய்ய முடிவு செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அதை கருணைக்கொலை செய்தனர். கருணைக்கொலை செய்யப்பட்ட அம்பிகா வட அமெரிக்காவில் இருந்த ஆசிய யானைகளில் மூத்த 3-வது யானை என்று கருதப்படுகிறது.

அம்பிகா விரும்பும் தானியங்களையும், உணவு வகைகளையும் வரிசைப்படுத்தி உண்ணும் விதம் குறித்தும், அதன் புத்தி கூர்மை குறித்தும் பராமரிப்பாளார்கள் பெருமையாக சொல்லி வருகிறார்கள். வாஷிங்டன் தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர் ஸ்டீபன் மான்போர்ட் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக ஆசிய நாடுகளின் யானைகள் வகைக்கு அம்பாசிடராய் செயல்பட்ட அம்பிகா ஆசிய இன யானைகளின் உயிரியல், சூழலியல், குணநலன்கள், இனப்பெருக்கம் போன்றவைகள் பற்றி அறிய, வனவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக இருந்தது என பெருமிதம் கொள்கிறார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %