இந்தோனேசியாவை சேர்ந்த 800 இஸ்லாமிய மத போதகர்களை கருப்பு பட்டியலில் இணைக்கிறது உள்துறை அமைச்சகம்

Read Time:2 Minute, 35 Second
Page Visited: 54
இந்தோனேசியாவை சேர்ந்த 800 இஸ்லாமிய மத போதகர்களை கருப்பு பட்டியலில் இணைக்கிறது உள்துறை அமைச்சகம்

தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.

இந்த மாநாட்டில் மலேசியா, இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 300 பேர் வரையில் கலந்துக்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சுற்றுலா விசாவில் வந்த அவர்கள், ஜமாத்தில் தங்கியிருந்து மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது விசா நடைமுறைகளை மீறும் செயலாகும். இந்நிலையில் இந்தோனேசியாவை சேர்ந்த 800 இஸ்லாமிய மத போதகர்களை கருப்பு பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சகம் இணைக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

“இந்தோனேசியாவிலிருந்து இங்கு சுற்றுலா விசாவில் வந்தார்கள், மத மாநாடுகளில் பங்கேற்றுள்ளனர். இது விசா விதிகளை மீறுவதாகும். இந்தோனேசிய மத மத போதகர்கள் 800 பேரை நாங்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்போகிறோம், இதனால் எதிர்காலத்தில் அவர்கள் நாட்டிற்குள் நுழைய முடியாது ” என்று மத்திய அரசு அதிகாரி கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே தப்லிக் ஜமாத் நடவடிக்கைகளில் பங்கேற்கவந்த 1000 வெளிநாட்டவர்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறியதால் இந்தியாவிற்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %