உலகம் முழுவதும் ஒற்றை உயிர்க்கொல்லி நோயான கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் காணப்பட்ட கொரோனா உலகம் எங்கிலும் கால் பதித்து மக்களின் உயிரை குடித்து வருகிறது. வைரசிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கை மட்டுமே கைவசம் உள்ளது. மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
உலகம் முழுவதும் 877,041 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 43,541 பேர் உயிரிழந்துவிட்டனர். 185,065 சிகிச்சையில் நலம்பெற்றுள்ளனர்.
சீனாவை காட்டிலும் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்:-
நாடுகள் | பாதிப்பு | உயிரிழப்பு |
---|---|---|
இத்தாலி | 105,792 | 12,428 |
ஸ்பெயின் | 102,136 | 9,053 |
அமெரிக்கா | 188,647 | 4,059 |
பிரான்ஸ் | 52,128 | 3,523 |
சீனா | 81,554 | 3,312 |
ஈரான் | 47,593 | 3,036 |
இங்கிலாந்து | 25,150 | 1,789 |
நெதர்லாந்து | 13,614 | 1,173 |
ஜெர்மனி | 73,217 | 802 |
பெல்ஜியம் | 13,964 | 828 |
மொத்தம் | 877,041 | 43,541 |