இந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் கீதா ராம்ஜி கொரோனாவிற்கு உயிரிழப்பு

Read Time:2 Minute, 21 Second

இந்திய வம்சாவளி வைராலஜி ஆய்வு நிபுணர் கீதா ராம்ஜி தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மனிதர்களை வேட்டையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரையில் 5 பேர் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டனிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு கீதாராம்ஜி சென்றுள்ளார். அவருக்கு வெளியில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்காக அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

தென் ஆப்பிரிக்க இந்திய வம்சாவளி பார்மசிஸ்ட் பிரவின் ராம்ஜியை இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய எச்.ஐ.வி தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்புக்கான ஐரோப்பிய மேம்பாட்டு மருத்துவ பரிசோதனைகள் கூட்டமைப்பு 2018-ம் ஆண்டு கீதாராம்ஜிக்கு லிஸ்பனில் தனித்துவமான பெண் விஞ்ஞானி விருது அளிக்கப்பட்டது. எச்.ஐ.வி தடுப்பு ஆய்வுக்காக அவருக்கு 2012-ம் ஆண்டில் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. அவர் 170-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டு உள்ளார். பல அறிவியல் இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

கீதா ராம்ஜி மறைவால் வைரஸ் ஆய்விலும் எச்.ஐ.வி. தடுப்பு ஆய்விலும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்ததோடு, இவரது மறைவிற்கு பெரும் சோகம் அடைந்து உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.