ரஷிய அதிபர் புதினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா…?

Read Time:3 Minute, 42 Second
Page Visited: 38
ரஷிய அதிபர் புதினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா…?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

ரஷியாவை பொறுத்தமட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 27-வது இடத்தில் இருக்கிறது. கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷியா இருந்தது. தற்போது அங்கும் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. ரஷியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனிடையே ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது.

இதையடுத்து தலைநகர் மாஸ்கோ உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசிய போது அவருடன் கை குலுங்கிய டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைக்கு புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார். முக கவசம், கையுறைகள் என எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் சாதாரணமாக மருத்துவமனையில் நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கை குலுக்குவது, கட்டி தழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் புதின், மருத்துவமனை தலைமை டாக்டர் டெனிஸ் புரோட்சென்கோவுடன் சகஜமாக கை குலுக்கினார்.

டாக்டர் டெனிஸ் புரோட்சென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் புதினுடன் நெருக்கமாக இருந்த டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டாக் டரிடம் இருந்து அவருக்கும் வைரஸ் பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், புதின் வழக்கம் போல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %