தப்லிக் ஜமாத்துடன் தொடர்புடைய 960 வெளிநாட்டவர்கள் கருப்பு பட்டியலில் இணைப்பு – அமித்ஷா அதிரடி

Read Time:4 Minute, 39 Second
Page Visited: 80
தப்லிக் ஜமாத்துடன் தொடர்புடைய 960 வெளிநாட்டவர்கள் கருப்பு பட்டியலில் இணைப்பு – அமித்ஷா அதிரடி

டெல்லியில் தப்லிக்-ஏ-ஜமாத் என்ற பெயரில் கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பு சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பிற்கான ‘மர்கஸ்’ என்னும் தலைமையகம் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் இருக்கிறது. இங்கு அவ்வப்போது இஸ்லாமிய மத மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில் வங்காள தேசம், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்தும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மாநாட்டில் கலந்துக்கொண்டு சென்றவர்களால் இந்தியா முழுவதும் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309-ஆக உயர்ந்து கொண்டு போவதற்கு முக்கியமான காரணம் இந்த டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான். தமிழகத்தில் மட்டும் இதுவரை டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து கொரோனா சமூக பரவலாக மாறக்கூடாது என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மாநாட்டிற்கு சென்றவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே இம்மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் விசா விதிமுறைகளை மீறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுலா வருவதாக சுற்றுலா விசாவை வாங்கிவிட்டு மத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. இந்நிலையில் தப்லிக் ஜமாத்துடன் தொடர்புடைய 960 வெளிநாட்டவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் கருப்பு பட்டியலில் இணைத்துள்ளது. அவர்களுடைய விசாவும் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டினர் சட்டம், 1946 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசுக்களுக்கும், டெல்லி போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மசூதிகளில் சோதனை

இதற்கிடையே தப்லிக் ஜமாத் உறுப்பினர்களைக் கண்டறிய இந்தியா முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் பிற இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியில் 168 வெளிநாட்டினர் 17 மசூதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி உள்ளனர்.

வெளிநாட்டு தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மத விரிவாக பயணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %