ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுத்தள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி உத்தரவு

Read Time:2 Minute, 45 Second
Page Visited: 88
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுத்தள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி உத்தரவு

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் மக்களின் உயிரை வேகமாக குடிக்கிறது.

வைரசுக்கு எதிராக மருந்து இல்லாத காரணத்தினால் தடுப்பு நடவடிக்கை மட்டுமே கைவசம் உள்ளது.

வைரசினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளியிருப்பது மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

எனவே உலக நாடுகள் அனைத்தும் பொதுமக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டிலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து பொதுமக்களால் மீறப்பட்டு வருகிறது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் 2,311 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேர் வரையில் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறுபவர்களை சகித்துக்கொள்ள முடியாது. அவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என அந்நாட்டு அதிபர் உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

பிலிபைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி தொலைக்காட்சியில் பேசுகையில், ஊரடங்கு உத்தரவுக்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம், வீட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். என்றார். “காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு எனது உத்தரவுகள்… சிக்கல் இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்.” என கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களால் சிக்கல் ஏற்பட்டாலும், உங்கள் உயிருக்கு ஆபத்து இருந்தாலும், அவர்களை சுட்டுக் கொல்லுங்கள் என அதிரடியான உத்தரவை அதிபர் காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை மீறுபவர்கள் சிக்கலை ஏற்படுத்தியதற்காக சுடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %