இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் மூலம் இந்தியா முழுவதும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு தமிழகம் திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்தது. இவர்களில் 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 100 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்த தகவலை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.