அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது; 1½ மாத கைக்குழந்தை உயிரிழந்த பரிதாபம்!

Read Time:3 Minute, 21 Second
Page Visited: 61
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது;  1½ மாத கைக்குழந்தை உயிரிழந்த பரிதாபம்!

சீனாவில் தொடங்கி இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகமான உயிரை குடித்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 245,341 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக அளவாக, நியூயார்க் மாகாணத்தில் பலி எண்ணிக்கை 2000-ஐ நெருங்கி விட்டது.

இதற்கிடையே, அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், பிறந்து 6 வாரங்களே ஆன கைக்குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹார்ட்போர்டு பகுதியை சேர்ந்த அந்த பெண் குழந்தை, உணர்விழந்த நிலையில் கடந்த வாரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அதை உயிர் பிழைக்க வைக்க மருத்துவர்கள் நடத்திய போராட்டம் தோல்வி அடைந்து, குழந்தை உயிரிழந்தது. அதன் பிறகு தான், குழந்தையின் ரத்த மாதிரி முடிவுகள் வெளியாகியது. அதில், குழந்தைக்கு கொரோனா இருந்தது உறுதியானது.

இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்ட கனெக்டிகட் மாகாண கவர்னர் நெட் லேமோண்ட், குழந்தை இறந்தது இதயத்தை நொறுக்குவதாக அமைந்து விட்டது. கொரோனாவிடம் இருந்து யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை இச்சம்பவம் நிரூபித்து விட்டது. கனெக்டிகட் மாகாணத்தில் கொரோனாவுக்கு பலியான மிக இளவயது நபர், அந்த குழந்தைதான். அதன் பெற்றோருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 85 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, கனெக்டிகட் மாகாணத்தில், வருகிற 15-ம் தேதிவாக்கில் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும், ஆஸ்பத்திரி படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவும் என்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. 1,100 பேர் பலியாக வாய்ப்புள்ளதாகவும் கூறி உள்ளது. மே மாதத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைய தொடங்கும் என்றும், ஜூன் மாதம் தொடங்கும்போது, யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படாது என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %