டெல்லி மசூதிகளில் 800-க்கும் அதிகமான வெளிநாட்டு ஜமாத் பணியாளர்கள் ஒளிந்திருந்தது கண்டுபிடிப்பு…! மேலும், அதிகரிக்கும் கொரோனா அச்சம்…!

Read Time:5 Minute, 3 Second

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களால் இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்த வெளிநாட்டவர்கள் ஜமாத் நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.

தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, டெல்லி மசூதிகளில் 800-க்கும் அதிகமான வெளிநாட்டு ஜமாத் பணியாளர்கள் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் தேதி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்திலிருந்து 2,300 பேரை போலீசார் மற்றும் மருத்துவ ஊழியர்கள் வெளியேற்றினர். அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தேசிய தலைநகரில் வெவ்வேறு மசூதிகளில் வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மார்ச் 31 அன்று டெல்லி காவல்துறை மாநில அரசுக்கு அவசர செய்தியை அனுப்பியது. அதில் நகரின் மசூதிகளில் இருந்து மீதமுள்ள ஜமாத் பணியாளர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று 16 மசூதிகளை பட்டியலிட்டது.

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் தப்லிக் ஜமாத் தலைமையகத்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் வெறு மசூதிகளுக்கு சென்ற 187 வெளிநாட்டினரை கண்டுபிடிக்க புலனாய்வு பிரிவினர் தயாராக இருந்துள்ளனர். அப்போதுதான் கூடுதல் தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து நான்கு நாட்கள் போலீசார், சுகாதார ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஒருங்கிணைந்த குழுக்கள் ஏராளமான மசூதிகளில் சோதனையை மேற்கொண்டுள்ளது. அப்போது, அதிகமான வெளிநாட்டு ஜமாத் பணியாளர்கள் மறந்திருப்பது தெரியவந்துள்ளது.

“இதில் பெரிய பயம் என்னவென்றால், அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம், மேலும் பலரை ஏற்கனவே பாதித்திருக்கக்கூடும்” என்று அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள். டெல்லி அரசாங்கத்தின் உள்துறைத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள தகவலில், எத்தனை வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதை வெளிப்படுத்த முடியாது. நாங்கள், களத்திலிருந்து இறுதி அறிக்கையை பெற வேண்டியது உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், டெல்லி வடகிழக்கு மாவட்டத்தின் மசூதிகளில் சுமார் 100 வெளிநாட்டவர்கள், தென்கிழக்கு மாவட்டத்தில் 200 பேர், தென் மாவட்டத்தில் 170 பேர் மற்றும் மேற்கு மாவட்டத்தில் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்லிக் ஜமாத்தில் பராமரிக்கப்படும் வெளிநாட்டினருக்கான பதிவேடுகளை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். மார்ச் 1 முதல் 18 வரை நாட்டில் தரையிறங்கிய பின்னர் 2,100 வெளிநாட்டவர்கள் ஜமாத்துடன் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களில் 216 பேர் ஜமாத்தில் பரிசோதனை நடந்தபோது கண்டுபிடிக்கப்பட்டனர். ஏற்கனவே, அங்கிருந்த 824 பேர் வெளியேறிவிட்டனர். மீதமுள்ள 900-த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பெரும்பாலும் நகரத்தை சுற்றியுள்ள மசூதிகளில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.