கான்பூர் மருத்துவமனையிலும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் ‘அநாகரிகம் ’… பெண் செவிலியர்கள் பணியிலிருந்து நிறுத்தியது மருத்துவமனை நிர்வாகம்!

Read Time:4 Minute, 58 Second

மார்ச் தொடக்கத்தில் டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட மத வழிபாடு மாநாட்டில் வெளிநாட்டவர்கள் உள்பட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பும் தப்லீக் ஜமாத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து பிற மாநிலங்களுக்கு சென்றவர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு மாநில வாரியாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநாட்டுக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது தெரியவந்தது. அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டது.

கான்பூர் மருத்துவமனை

இவ்வாறு கான்பூரில் உள்ள லாலா லஜபதி மருத்துவமனையில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில், 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மருத்துவமனைியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மருத்துவர்களிடம் அத்துமீறுவதும், செவிலியர்கள், ஊழியர்களிடம் அவதூறாகப் பேசுவதாவும், அநாகரீகமாக நடப்பதாக இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் சுக்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 22 பேரில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இங்கிருக்கும் ஜமாத் உறுப்பினர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளிக்க அருகே சென்றால் அவர்கள் மீது எச்சில் துப்புவது, கைகளில் எச்சில் துப்பி பொருட்கள் மீது தடவுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மருத்துவமனையில் எச்சில் உமிழக்கூடாது என்று கூறினாலும் அவர்கள் அதனை மதிப்பது கிடையாது. விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. மருத்துவர்களிடம் அவதூறாகப் பேசுவதும், தவறாகவும் நடப்பதுமாக இருக்கிறார்கள். இதில் போலீசார் தலையிட்டால் தான் இந்த பிரச்சினைக்கு முடிவு காண முடியும். இவர்களின் தவறான நடத்தையால் பெண் செவிலியர்களை இவர்களுக்கு சிகிச்சையளிக்க அனுப்புவதை நிறுத்திவிட்டோம். இது தொடர்பாக போலீஸாருக்கும், மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்து உள்ளோம் எனக் கூறினார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பட்டு உள்ளனர். அவர்கள் வந்ததும் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோல் உத்தபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் டெல்லி தப்லிக் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் மருத்துவ பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் வெளியாகியது. மருத்துவமனையில் ஒன்றாக இணைந்து தொழுகை செய்வதும், சிகரெட்கள் வேண்டும் என்று அடம் பிடிப்பதும், மருத்துவ பணியாளர்களை நோக்கி ஆபாச சைகைகளை செய்வது, ஆடையின்றி இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.