கொரோனாவிற்கு எதிரான போரில் இந்திய மக்களின் ஒற்றுமையை காண்பிக்கும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களில் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் கொண்டு விளக்கேற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். மெழுவர்த்தி ஏற்றவும், டார்ச் லைட் அடிக்கவும் அழைப்பு விடுத்து இருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை ஏற்று கோடிக்கணக்கான மக்கள் மின்சார விளக்கை அணைத்துவிட்டு வீடுகளில் விளக்கேற்றினர். பலர் தங்களுடைய வீட்டின் மாடியிலும், வீட்டின் முன்னதாகவும் விளக்குகளை ஏற்றினர். விளக்குகளை ஏந்தியவாறும் நின்றனர். செல்போன்களில் வெளிச்சம் பரப்பினர்.
பிரதமர் மோடி டெல்லியில் தன்னுடைய வீட்டில் 9 நிமிடங்கள் விளக்கை அணைத்துவிட்டு குத்துவிளக்கில் விளக்கேற்றினார்.
மத்திய சென்னையில் கட்டிடம் ஒன்றில் முழுவதுமாக விளக்குகள் அணைக்கப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது தொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Tamil Nadu: Residents of a society in Chennai Central have turned off lights of their houses, following the call by PM Modi to switch off all lights of houses today at 9 PM for 9 minutes&just light a candle, ‘diya’ or mobile’s flashlight, to mark the fight against #Coronavirus. pic.twitter.com/c1O7oU0ewf
— ANI (@ANI) April 5, 2020
பிரதமரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் விளக்கேற்றினர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய வீட்டில் விளக்கேற்றினார். தமிழகம் முழுவதும் கிராமபுறங்களில் மக்கள் வாசலை சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றினர்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று போயஸ் கார்டனில் தன்னுடைய வீட்டின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தியுடன் ஒளியேற்றினார்.
சென்னையில் இந்திய வரைப்படம் போன்றும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது. இதனை பலரும் பராட்டி வருகிறார்கள். இந்தியா 9 நிமிடங்கள் தீபாவளியாக காட்சியளித்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் அவருடைய வீட்டிற்கு வெளியே விளக்கேற்றியிருந்தார். இதுபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விளக்கேற்றியிருந்தனர்.