பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய 5 பயங்கரவாதிகளை வேட்டையாடியது இந்திய ராணுவம்… காஷ்மீரில் 24 மணி நேரங்களில் 9 பயங்கரவாதிகள் சாவு!

Read Time:1 Minute, 46 Second

இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க விரும்பும் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை அனுப்பி தாக்குதலை நடத்த திட்டமிடுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்து வருகிறது.

கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் தற்போது பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து உள்ளனர்.

வடக்கு காஷ்மீரின் கெரன் செக்டாரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. அப்போது இருதரப்பு இடையே தொடங்கிய சண்டையில் 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டனர். இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடக்கிறது. மோசமான வானிலைக்கு சாதகமாக பயன்படுத்தி எல்லைக்கட்டுப்பாட்டு கோடுவழியாக பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் ஒன்பது பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் வேட்டியாடியுள்ளனர். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பயங்கரவாதிகள் ஏப்ரல் 4-ம் தேதி தெற்கு காஷ்மீரின் பாத்புரா பகுதியில் கொல்லப்பட்டனர்.