உலகம் முழுவதும் ஒற்றை உயிர்க்கொல்லி நோயான கொரோனாவிற்கு எதிராக நாடுகள் போராடி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் காணப்பட்ட கொரோனா உலகம் எங்கிலும் கால் பதித்து மக்களின் உயிரை வேகமாக குடித்து வருகிறது. வைரசிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கை மட்டுமே மனித குலம் முன்னர் பாதுகாப்பு கவசமாக கைவசம் உள்ளது. மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. வைரசின் வேகம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் காட்டுதீயாக செல்கிறது.
உலகம் முழுவதும் 1,274,346 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 69,480
பேர் உயிரிழந்துவிட்டனர். 264,838 சிகிச்சையில் நலம்பெற்றுள்ளனர்.
சீனாவை காட்டிலும் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரசின் தாக்கம், உயிரிழப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் 336,830 பேர் வைரஸ் தொற்றில் சிக்கியுள்ளனர். உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல் விபரம்:-
இத்தாலி
பாதிப்பு – 128,948
உயிரிழப்பு – 15,887
ஸ்பெயின்
பாதிப்பு – 131,646
உயிரிழப்பு – 12,641
அமெரிக்கா
பாதிப்பு – 336,830
உயிரிழப்பு – 9,618
பிரான்ஸ்
பாதிப்பு – 92,839
உயிரிழப்பு – 8,078
இங்கிலாந்து
பாதிப்பு – 47,806
உயிரிழப்பு – 4,934
ஈரான்
பாதிப்பு – 58,226
உயிரிழப்பு – 3,603
சீனா
பாதிப்பு – 81,708
உயிரிழப்பு – 3,331
நெதர்லாந்து
பாதிப்பு – 17,851
உயிரிழப்பு – 1,766
ஜெர்மனி
பாதிப்பு – 100,123
உயிரிழப்பு – 1,584
பெல்ஜியம்
பாதிப்பு – 19,691
உயிரிழப்பு – 1,447