இந்தியாவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்து உள்ளது. அம்மாநில தலைநகர் மும்பையில் மட்டும் 500-க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியே பொது இடத்திற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் முதல்நகரமாக இந்த கட்டுப்பாடு மும்பையில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தெருக்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் சந்தைகள் போன்ற பொது இடங்களுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த முகக்கவசங்கள் மருத்துவமனைகள், மருந்தகங்களில் கிடைக்கும். துவைக்கக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகளை மக்கள் அணியலாம். வாகனத்தில் சென்றாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் யாரும் எந்த கூட்டத்திலும் கலந்துக்கொள்ள கூடாது என்று மும்பை நகராட்சி ஆணையர் பிரவீன் பர்தேஷி கூறியுள்ளார்.
இந்த கட்டுப்பாட்டுக்கு இணங்க தவறியவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.