உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. வைரசிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கை மட்டுமே பாதுகாப்பு அளிப்பதாக கைவசம் உள்ளது.
வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பில் இருக்கும் மருந்துகள் தடுப்பு நடவடிக்கையாக பயன்படுத்தப்படுகிறது. மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. சீனாவை காட்டிலும் இந்நாடுகள் அதிகமான பாதிப்பை சந்தித்து வருகின்றன.
உலகம் முழுவதும் 1,699,632 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 102,734 பேர் உயிரிழந்துவிட்டனர். 376,330 பேர் சிகிச்சையில் நலம்பெற்று உள்ளனர். அமெரிக்காவில் அதிகமான பாதிப்பும், இத்தாலியில் அதிகமான உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. கொரோனாவினால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்:-
இத்தாலி
பாதிப்பு – 147,577
உயிரிழப்பு – 18,849
ஸ்பெயின்
பாதிப்பு – 157,022
உயிரிழப்பு – 15,843
அமெரிக்கா
பாதிப்பு – 502,876
உயிரிழப்பு – 18,747
பிரான்ஸ்
பாதிப்பு – 124,869
உயிரிழப்பு – 13,197
இங்கிலாந்து
பாதிப்பு – 73,758
உயிரிழப்பு – 8,958
ஈரான்
பாதிப்பு – 68,192
உயிரிழப்பு – 4,232
சீனா
பாதிப்பு – 81,953
உயிரிழப்பு – 3,339
பெல்ஜியம்
பாதிப்பு –26,667
உயிரிழப்பு – 3,019
ஜெர்மனி
பாதிப்பு – 122,171
உயிரிழப்பு – 2,336
நெதர்லாந்து
பாதிப்பு – 23,097
உயிரிழப்பு – 2,511