இந்தியாவில் ஊரடங்கு நடவடிக்கையையும் மீறி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து செல்கிறது.
மத்திய அரசு கொண்டுவந்த ஊரடங்கு செவ்வாய் கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒடிசா மற்றும் பஞ்சாப் ஊரடங்கை நீட்டித்து உள்ளன. பிற மாநிலங்களும் இக்கோரிக்கையை மத்திய அரசிடம் கூறின. இவ்விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள அனைத்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி இன்று ஆலோசனையை மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்கவே கோரிக்கையை விடுத்து உள்ளன என தகவல் வெளியாகியது.
இதற்கிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை தேசிய அளவில் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை தேசிய அளவில் எடுக்க வேண்டும். மாநிலங்களிடம் ஊரடங்கு முடிவுகளை விடுவதில் பயனில்லை, அது பலனளிக்காது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களை தவிர வேறு வாகனப்போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும் என்றார்.