பாகிஸ்தான் எல்லையில் அடாவடி… இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், 8 பயங்கரவாதிகள் சாவு…

Read Time:2 Minute, 9 Second

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை நுழைய செய்து தாக்குல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு செயல்படுகிறது. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி தாக்குதல் நடத்தி இந்திய ராணுவத்தை திசைத்திருப்பி பயங்கரவாதிகளை எப்படியாவது அனுப்பிவிட வேண்டும் என பாகிஸ்தான் திட்டமிட்டு செயல்படுகிறது.

எல்லையில் இவ்வாறு அடாவடியில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத ஏவுதளங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடவடிக்கையை எடுத்து உள்ளது என உளவுத்துறை தெரிவித்து உள்ளது.

இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், 8 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எல்லையில் அதிதீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த வாரம் 24 மணி நேரத்தில், ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் ஒன்பது பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் வேட்டியாடினர். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பயங்கரவாதிகள் ஏப்ரல் 4-ம் தேதி தெற்கு காஷ்மீரின் பாத்புரா பகுதியில் கொல்லப்பட்டனர். பின்னர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய 5 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேட்டையாடியது எனது குறிப்பிடத்தக்கது.