#Coronavirus பொருளாதாரமே முக்கியம்… அமெரிக்க மக்களின் உயிரை காவு வாங்கிய டொனால்டு டிரம்ப்…! நியூயார்க் டைம்ஸ் ஆய்வில் அம்பலம்

Read Time:8 Minute, 46 Second

இன்று கொரோனா வைரசினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்து உள்ளது. கொரோனா ஜெட் வேகத்தில் பரவி மக்களின் உயிரை வேகமாக குடித்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரசிற்கு 533,115 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 20,580 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையே கைவசம் உள்ளது என உலக நாடுகள் தங்கள் நாட்டில் வைரஸ் பாதிப்பு தகவல் அறிந்ததும் நடவடிக்கையை எடுத்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மட்டும் எனக்கு அமெரிக்க ரத்தம் கொரோனா வைரஸ் என்னை ஒன்னும் செய்யாது என நெஞ்சை நிமித்தினார்.

அவர் சொன்னப்படி அவரை கொரோனா வைரஸ் இதுவரையில் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அந்நாட்டு மக்களை வேகமாக வேட்டையாடி வருகிறது. பாதிப்பை உணர்வதற்கு மக்கள் சாவதும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதும் தொடர்கிறது. நியூயார்க்கில் வைரஸ் பரவல் காணப்பட்டதும் ஊரடங்கை அமல்படுத்த பலதரப்பில் நிர்பந்தம் நேரிட்டது. ஆனால், ஐயோ நாங்கள் நம்பர் ஒன் பொருளாதார நாடு நாங்கள் எப்படி… இதெல்லாம் சாத்தியமில்லை என்றார். இப்போது வைரஸ் பரவியதும் மற்ற நாடுகள் மீது குற்றம் சாட்டி தப்பித்துக்கொள்ளவும் முனைகிறார். மேலும், மாத்திரை விற்பனையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரைக்கை டொனால்டு டிரம்பை கிழித்து தொங்கவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த ஜனவரி மாதமே சீனாவின் உகான் நகரில் பேரழிவை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு, சுகாதாரத்துறை அதிபர் டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாக மாறக்கூடும் அதற்கு அமெரிக்கா தயாராக வேண்டும் என்ற எச்சரிக்கையை டிரம்ப் அலட்சியப்படுத்தி உள்ளார்.

டிரம்ப்பின் இந்த அலட்சியம் காரணமாக உலகிலேயே மிக அதிகமான உயிரிழப்புகளை கொரோனவால் சந்திக்கும் நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு மோசமான சூழலை தேசம் எட்டியுள்ளது. உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இருந்ததாலும், சரியான தி்ட்டமிடல் இல்லாமல் இருந்ததாலும், அதிபர் டிரம்ப் அவரின் சொந்த உள்ளுணர்வு மீது இருந்த நம்பிக்கை போன்றவை அமெரிக்காவை அழிவில் தள்ளி உள்ளது.

வெள்ளை மாளிகையின் அனைத்து மட்ட ஆலோசகர்களும் கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கையை அதிபர் டிரம்பிடம் வெளி்ப்படுத்தி உள்ளார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் அதிபர் டிரம்ப் மிகவும் அலட்சியமாகவும், மெதுவாகவும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து உள்ளார். வர்த்தக ரீதியாக சீனாவை எவ்வாறு கையாள்வது, அதிகாரிகளின் உள்நோக்கம் இவற்றை பற்றி மட்டுமே டிரம்ப் தொடர்ந்து சிந்தித்து உள்ளார்.

ஆனால், கொரோனா வைரசின் ஆபத்து பற்றி அதிக அக்கறை கொள்ளாமல் நாட்டை பெரும் துயரில் விட்டுள்ளார். ஜனவரில் சீனாவின் உகான்நகரில் இருந்து கொரோனா வைரஸ் குறித்து முறைப்படியான எச்சரிக்கைகள் அமெரிக்க தேசிய உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ளது. தேசிய தொற்றுநோய்தடுப்பு வல்லுநர்களும் கொரோனா வைரஸின் தீவிரத்தையும் ஆபத்தையும் எச்சரித்து உள்ளனர். தேசிய மருத்து புலனாய்வு பிரிவு, ராணுவ உளவுத்துறை அனைத்தும் கொரோனா வைரஸின் ஆபத்து குறித்து ஒரே மாதிரியான எச்சரிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஜனவரி மாதத்துக்குப்பின் கொரோனா வைரஸ் தீவிரமடைந்த உடனேயே தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் பயோ-டிபென்ஸ் பிரிவினர் துரிதமாக செயல்பட்டு அமெரிக்காவின் எல்லைகள் முழுவதையும் சீல் வைக்க அறிவுறுத்தி உள்ளனர். மக்களை வீ்ட்டில் இருந்தே பணிபுரியவும் அறிவுறுத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்து உள்ளார்கள். ஆனால், எதற்குமே செவி சாய்க்காத டிரம்ப், இத்தகையை பேரழிவுக்கு காரணமாகியுள்ளார்.

அதுமட்டும் கிடையாது டிரம்பின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான பீட்டர் நவாரோ அவருக்கு எழுதிய கடிதத்தில் “ கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் மிகப்பெரிய பேரழிவு அமெரிக்காவில் ஏற்படலாம். இதனால் 5 லட்சம் மக்கள் மடிவார்கள், லட்சக்கணக்கான கோடி டாலர்கள் பொருளாதார இழப்பு நேரிடும் என எச்சரிக்கை,” விடுத்திருந்தார். மேலும், அமெரிக்காவில் வாழும் 30 சதவீத மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள் எவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த டிரம்போ அப்படி ஒரு எச்சரிக்கை கடிதம் பீட்டரிடம் இருந்து வரவில்லை என்று கூறிவிட்டார். ஆனால், பீட்டர் நவோரோ எழுதிய கடிதம் குறித்து அவரின் உதவியாளர்கள் டிரிம்ப்பிடம் கூறியபோது, அவர் அதிருப்தி அடைந்து எதற்காக நவோரா தனது கருத்துக்களை கடிதத்தில் எழுதினார் என காட்டம் கொண்டுள்ளார். இது மட்டும் கிடையாது கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 3 வாரங்களையும் அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளவி்ல்லை என்று அந்த நாளேடு குற்றம்சாட்டி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் என பிப்ரவரி மாதத்தின் 3-வது வாரத்திலும் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

குறி்ப்பாக சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வலியுறுத்தி, வீட்டில் இருந்தவாரே பணியாற்ற வைக்கலாம், பள்ளிகள், கல்லூரிகளை மூடிவிடலாம் என்று உச்சகட்ட எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆனால் அப்போதும் டிரம்ப் மிகவும் அலட்சியப்போக்கோடு இருந்து உள்ளார். ஆனால், கைவிட்டு சென்ற பின்னர் மூன்று வாரங்கள் கழித்து டிரம்ப் தீவிரமாக அமெரிக்காவில் சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அமெரிக்காவில் பெரும்பகுதியில் கொரோனா காலாண்றி பரவிவிட்டது. இப்போது அமெரிக்காவில் நிலவும் சூழல்களால் எவ்வாறு மக்களுக்கு பதில் அளிப்பது என்பதில் வெள்ளை மாளிகையில் விரிசல் ஏற்பட்டு நிற்கிறது. மார்ச் மாதத்தில் பிளவுபட்ட கருத்துக்களால் அதிபர் டிரம்ப் சூழப்பட்டிருந்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தீவிரமான நடவடிக்கைகளை தவிர்ததது நியாயமானது கிடையாது என்பது புரியதொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் நடவடிக்கை தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.