தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் நேற்றைய (ஏப்ரல் 13) நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக இருந்தது. இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலில் மாநில அரசு மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று பிரித்து உள்ளது. வேகமாக ‘கொரோனா’ பரவும் மாவட்டங்கள் சிவப்பு நிறத்தில் பட்டியலிடப்படுகிறது.
சிவப்பு பட்டியலில் இடம் பெற்று உள்ள மாவட்டங்கள்:-
சென்னை – 210, கோவை – 126, திருப்பூர் – 79, ஈரோடு – 64, திருநெல்வேலி – 56, திண்டுக்கல் – 65, நாமக்கல் – 45, செங்கல்பட்டு – 46, திருச்சி – 43, தேனி – 40, கரூர் – 41, ராணிப்பேட்டை 38, மதுரை – 41, திருவள்ளூர் – 33, நாகை – 31, தூத்துக்குடி – 26, விழுப்புரம் – 23.
ஆரஞ்சு பட்டியல்
கடலூர் -20, சேலம் – 19, திருப்பத்தூர் – 17, கன்னியாகுமரி – 16, திருவாரூர் 16, விருதுநகர் – 17 , வேலூர் – 16, தஞ்சை – 16, திருவண்ணாமலை – 12.
மஞ்சள் பட்டியல்
நீலகிரி – 09, காஞ்சிபுரம் – 08, சிவகங்கை -11, தென்காசி – 08, கள்ளக்குறிச்சி – 03, ராமநாதபுரம் -07, அரியலூர் – 01, பெரம்பலூர் – 01.
தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதிவரையில் நீட்டித்து உள்ளது. இதன் மூலம் பலனடைய வேண்டும் என்றால் பொதுமக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. எனவே, அரசின் கோரிக்கைக்கு செவிசாத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றுவோம் கொரோனாவை விரட்டுவோம்.