உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று பரவி மக்களின் உயிரை வேட்டையாடி வருகிறது.
வைரசிடம் இருந்து தப்பித்துக்கொள்ள அதனால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்காது இருப்பது மட்டுமே வழியாகும். மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையின் மூலம் நம்மை கொரோனா வைரசிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். வைரசுக்கு எதிரானமருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. இதற்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.
சீனாவை காட்டிலும் இந்நாடுகளில் அதிகமான பாதிப்பு கணப்படுகிறது. உலகம் முழுவதும் 2,014,006 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 127,594 பேர் உயிரிழந்துவிட்டனர். 491,824 பேர் சிகிச்சையில் நலம்பெற்று உள்ளனர். இதற்கிடையே வைரசில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படும் அவலம் தொடர்கிறது. அமெரிக்காவில்தான் அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் உள்ளது. கொரோனாவினால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்:-
அமெரிக்கா
பாதிப்பு – 614,246
உயிரிழப்பு – 26,064
இத்தாலி
பாதிப்பு – 162,488
உயிரிழப்பு – 21,067
ஸ்பெயின்
பாதிப்பு – 177,633
உயிரிழப்பு – 18,579
பிரான்ஸ்
பாதிப்பு – 143,303
உயிரிழப்பு – 15,729
இங்கிலாந்து
பாதிப்பு – 93,873
உயிரிழப்பு – 12,107
ஈரான்
பாதிப்பு – 76,389
உயிரிழப்பு – 4,777
பெல்ஜியம்
பாதிப்பு – 33,573
உயிரிழப்பு –4,440
சீனா
பாதிப்பு – 82,295
உயிரிழப்பு – 3,342
இதில் 77,816 பேர் குணமடைந்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி
பாதிப்பு – 132,210
உயிரிழப்பு – 3,495
நெதர்லாந்து
பாதிப்பு – 27,419
உயிரிழப்பு – 2,945