கொரோனாவை எதிர்த்து போரிட – இந்தியாவுக்கு 5.9 மில்லியன் டாலர்களை சுகாதார நிதி உதவியாக வழங்கியது அமெரிக்கா!.

Read Time:2 Minute, 49 Second
Page Visited: 52
கொரோனாவை எதிர்த்து போரிட – இந்தியாவுக்கு 5.9 மில்லியன் டாலர்களை சுகாதார நிதி உதவியாக வழங்கியது அமெரிக்கா!.

உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

இந்தியாவில் ஊரடங்கு நடவடிக்கையையும் மீறி கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நிதியுதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா 5.9 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 45 கோடியே 14 லட்சத்து 9 ஆயிரம்) சுகாதார நிதியுதவியாக வழங்கியுள்ளது.

வைரஸ் பரவல் தடுப்பு, பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு சிகிச்சை, அத்தியாவசிய பொதுச் சுகாதார செய்திகளை பரப்புதல், கொரோனா நோயாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைக்காக இந்த உதவி தொகை வழங்கப்பட்டு உள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் கொரோனா உதவித்தொகையின் ஒரு பகுதியாகும் இது, இதில் 1.4 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவுக்கு மருத்துவ உதவியாக அமெரிக்கா 20 ஆண்டுகளாக அளித்து வரும் தொகையில் உள்ளடங்கியதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுத்துறை மற்றும் அமெரிக்க பன்னாடு வளர்ச்சி முகமை தற்போது 508 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக மருத்துவம், மனிதார்த்த மற்றும் பொருளதார மேம்பாட்டுக்காக ஒதுக்கி உள்ளது.

இது தவிர அரசு சாரா சமூகநல அமைப்புகளுக்கு உலகம் முழுதும் கோவிட்-19-ஐ எதிர்த்து போராட நிதியுதவியை அமெரிக்கா அளித்து உள்ளது.

இதுபோக ஆப்கானிஸ்தானுக்கு 18 மில்லியன் டாலர்கள், வங்கதேசத்துக்கு 9.6 மில்லியன் டாலர்கள், பூடானுக்கு 5 லட்சம் டாலர்கள், நேபாளுக்கு 1.8 மில்லியன் டாலர்கள், பாகிஸ்தானுக்கு 9.4 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர்கள் உதவித்தொகையை அமெரிக்கா வழங்கி உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %