அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் ஜெட் வேகத்தில் செல்கிறது.
மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து உள்ளனர். உலகிலேயே கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.
அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 2000 பேர் வரையில் செத்து மடிந்து வருகிறார்கள். நிலமை இப்படியிருக்க டொனால்டு டிரம்ப், ஊரடங்கு உத்தரவை நீக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறார். அறிவியலாளர்கள், மாகாணங்களின் கவர்னர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனக் கூறும் நிலையில் டிரம்ப் மட்டும் அடமாக ஊரடங்கை நீட்டிக்க விரும்பமில்லாமல் உள்ளார்.
முதலிலே பொருளாதாரம் மீது அதிகம் கவலைப்பட்ட டொனால்டு டிரம்ப், மக்கள் பாதுகாப்பு என்ற எண்ணத்தை மனதிலிருந்து துடைத்துவிட்டார். அதன் விளைவே இன்று அமெரிக்கா இவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணமாகும்.
அமெரிக்காவில் இதுவரையில் கொரோனா வைரசுக்கு 678,210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 34,641 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
நியூயார்க் நகரமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. அங்கு மட்டுமே 2,22,284 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14,636 பேர் உயிரிழந்து உள்ளனர்.