உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை வேட்டையாடி வருகிறது. வைரஸ் காணப்பட்ட சீனாவைவிடவும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. அனைத்து நாடுகளிலும் வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா வைரசிடம் இருந்து தப்பித்துக்கொள்ள அதனால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்காது இருப்பது மட்டுமே வழியாகும். மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையின் மூலம் நம்மை கொரோனா வைரசிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். வைரசுக்கு எதிரானமருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. தற்காப்பு நடவடிகையை அனைவரும் பின்பற்றுதல் நலமாகும்.
உலகம் முழுவதும் 2,275,738 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 156,104 பேர் உயிரிழந்துவிட்டனர். 582,424 பேர் சிகிச்சையில் நலம்பெற்று உள்ளனர். உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் உள்ளது. கொரோனாவினால் உயிரிழப்புகளை அதிகம் கொண்டிருக்கும் 5 நாடுகள்:-
அமெரிக்கா
பாதிப்பு – 710,272
உயிரிழப்பு – 37,175
இத்தாலி
பாதிப்பு – 172,434
உயிரிழப்பு – 22,745
ஸ்பெயின்
பாதிப்பு – 191,726
உயிரிழப்பு – 20,043
பிரான்ஸ்
பாதிப்பு – 147,969
உயிரிழப்பு – 18,681
இங்கிலாந்து
பாதிப்பு – 114,217
உயிரிழப்பு – 15,464
இந்த ஐந்து நாடுகளில் மட்டுமே 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.