மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,540 பேருக்கு புதியதாக கொரோனை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்து உள்ளன. இறப்புகளின் எண்ணிக்கையும் 559 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வைரசினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,255 ஆக உள்ளது. வைரசினால் பாதிக்கப்பட்ட 77 வெளிநாட்டினரும் உள்ளனர். குணமானவர்களின் எண்ணிக்கை 2,841 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டிய மாநிலம் உள்ளது. அங்கு மட்டுமே 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,203 ஆக உயர்ந்து உள்ளது. இறப்பு எண்ணிக்கை 223 ஆக உயர்ந்து உள்ளது. அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையில் 2,724க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக டெல்லி கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை தாண்டி 2003 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு 45 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1400-ஐ கடந்துவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் கொரோனாவினால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளது.
மராட்டியம் மற்றும் டெல்லி தவிர்த்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை விபரம்:- குஜராத் (67), தெலுங்கானா (21), மத்திய பிரதேசம் (74), பஞ்சாப் (16), கர்நாடகா (16), மேற்கு வங்காளம் (12), காஷ்மீர் (5), உத்தரபிரதேசம் (17) கேரளா (3), ஜார்க்கண்ட் (2), ஆந்திரா (20) ராஜஸ்தான் (14) அரியானா (3), தமிழகம் (15) பீகார் (2). மேகலாயா, ஒடிசா, அசாம் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கு மத்தியிலும் நற்செய்தியாக கோவா மற்றும் மணிப்பூர் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாகியுள்ளது. மத்திய அரசின் தகவலின்படி கேரளா மற்றும் ஒடிசாவில் வைரசினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்த வண்ணம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:-
அந்தமான் – 15, ஆந்திரா – 722, அருணாச்சல் பிரதேசம் – 1, அசாம் – 35, பீகார் -96, சண்டிகார் – 26, சத்தீஷ்கார் – 36, டெல்லி – – 2003, கோவா – 7, குஜராத் -1851, அரியானா – 233, இமாச்சல் – 39, காஷ்மீர் – 350, ஜார்க்கண்ட் – 42, கர்நாடகா – 395, கேரளா – 402, லடாக் – 18, மத்திய பிரதேசம் – 1485, மராட்டியம் – 4203, மணிப்பூர் – 2, மேகலாயா – 11, மிசோரம் – 1, ஒடிசா – 68, புதுச்சேரி – 7, பஞ்சாப் – 219, ராஜஸ்தான் – 1478, தமிழகம் – 1477, தெலுங்கானா – 873, திரிபுரா – 2, உத்தரகாண்ட் – 44, உத்தரபிரதேசம் – 1176, மேற்கு வங்காளம் – 339.