கொரோனா வைரஸ்: “உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது” நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி திட்டவட்டம்!

Read Time:1 Minute, 44 Second

கொரோனா வைரஸ், உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக் கூடத்தில் தான் உருவாக்கப்பட்டு, பின்னர் உலக நாடுகளுக்கு அது கசிந்து பரவியுள்ளதாக அமெரிக்க டெலிவிஷன் ஒன்று பிரத்யேக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ், மனிதர்களால் ‘உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது’ என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, லூக் மாண்டாக்னியர் உறுதிப்பட கூறுகிறார்.

லூக் மாண்டாக்னியர் பிரான்ஸ் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “உலகமெங்கும் பேரழிவை ஏற்படுத்தும் கோவிட்-19 (கொரோனா வைரஸ்), உகான் நகர ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானது” என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் எச்.ஐ.வி. வைரஸ் கண்டுபிடிப்புக்காக 2008-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %