ஊரடங்கின் போது கூடுதலாக கடைகளை திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி… எந்த கடைகள் செயல்படலாம்… விபரம்:-

Read Time:3 Minute, 21 Second
Page Visited: 81
ஊரடங்கின் போது கூடுதலாக கடைகளை திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி… எந்த கடைகள் செயல்படலாம்… விபரம்:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலுமாக முடங்கி பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கில் ஏப்ரல் 20-ம் தேதிக்கு பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதார செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. சரக்கு லாரிப் போக்குவரத்து, வேளாண் பணிகள், மீன்பிடித் தொழில், சுயதொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் கூடுதலாக என்னென்ன கடைகள் திறக்கலாம் எனப் பட்டியலிட்டு உள்ளது.

அதில்,

  • மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்கலாம்.
  • மின்விசிறிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை விற்கும் கடைகளை திறக்கலாம்
  • வீடுகளில், காப்பகங்களில் முதியோர் இருந்தால் அவர்கள் உதவிக்காக பணிக்கு செல்வோர் செல்லலாம்.
  • மொபைல் போன் ரீசார்ஜ் கடைகள் திறந்து வைக்கலாம்.
  • பிரெட் (ரொட்டி) தயாரிக்கும் தொழிற்சாலை, பேக்கரிகள், மாவு அரைக்கும் மில்கள் போன்றவற்றை திறக்கலாம்.
  • பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், பருப்பு அரைக்கும் மில்கள், உணவு தானியங்கள் அரைக்கும் மில், ஏற்றுமதி, இறக்குமதிக்கு தேவையான பொருட்களை பேக்கிங் செய்யும் தொழிற்சாலைகள் செயல்படலாம்.
  • வேளாண் தொழில்கள், தோட்டக்கலை தொடர்பான தொழில்கள், அதுசார்ந்த உற்பத்தி பொருட்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
  • வேளாண் பொருட்களை இரு மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளும் கொண்டுசெல்லும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
  • தேன் எடுத்தல் தொழில், வன அலுவலகம், காடு வளர்ப்பு தொழில், அதுசார்ந்த தொழில்கள், மரம் வளர்ப்பு ஆகியவற்றுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.

இந்த தொழில்களை செயல்படுத்தும் போது கண்டிப்பாக அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்கவும், முகத்தில் முகக்கவசம் அணிவதும் கட்டயாமாகும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %