சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலாக தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது விஸ்வரூபம் எடுத்து விட்டது.
உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் மக்களை வேட்டையாடி வருகிறது.
இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் அதன்முன் மண்டியிடுகிற நிலைதான் உள்ளது. இந்த தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் பலவும் ஒன்றிணைந்து போர் தொடுத்து உள்ளன. இருப்பினும் கொரோனா வைரசின் கைதான் ஓங்கி நிற்கிறது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் 2,834,697 பேரை தாக்கி உள்ளது. பல நாடுகள் இன்னும் கூடுதலான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்குத்தான் பரிசோதனை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை அதிகளவில் கொண்டு, முதல் இடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா ஆகும். அங்கு 925,758 பேரை இந்த தொற்றுநோய் தாக்கி உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ஐரோப்பிய நாடுகள்தான் அணிவகுத்து நிற்கின்றன.
கொரோனா வைரசிடம் இருந்து தப்பித்துக்கொள்ள அதனால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்காது இருப்பது மட்டுமே வழியாகும். முன்னெச்சரிக்கை தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையின் மூலம் நம்மை கொரோனா வைரசிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். கொவைரசுக்கு எதிரானமருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்ட சீனாவை காட்டிலும் இந்நாடுகளில் அதிகமான பாதிப்பு கணப்படுகிறது. உலகம் முழுவதும் 2,834,697 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 197,421 பேர் உயிரிழந்துவிட்டனர்.808,024 பேர் சிகிச்சையில் நலம்பெற்று உள்ளனர். இதற்கிடையே வைரசில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படும் அவலம் தொடர்கிறது. கொரோனாவினால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியல்:-
அமெரிக்கா
பாதிப்பு – 925,758
உயிரிழப்பு – 52,217
இத்தாலி
பாதிப்பு – 192,994
உயிரிழப்பு – 25,969
ஸ்பெயின்
பாதிப்பு – 219,764
உயிரிழப்பு – 22,524
பிரான்ஸ்
பாதிப்பு – 159,828
உயிரிழப்பு – 22,245
இங்கிலாந்து
பாதிப்பு – 143,464
உயிரிழப்பு – 19,506
பெல்ஜியம்
பாதிப்பு – 44,293
உயிரிழப்பு – 6,679
ஜெர்மனி
பாதிப்பு – 155,054
உயிரிழப்பு – 5,767
ஈரான்
பாதிப்பு – 88,194
உயிரிழப்பு – 5,574
சீனா
பாதிப்பு – 82,816
உயிரிழப்பு – 4,632
நெதர்லாந்து
பாதிப்பு – 36,535
உயிரிழப்பு – 4,289