TMP Explained: இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு… 2-வது அலையும் தாக்கும் விஞ்ஞானிகள் எச்சரிப்பது என்ன…?

Read Time:9 Minute, 55 Second
Page Visited: 46
TMP Explained: இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு… 2-வது அலையும் தாக்கும் விஞ்ஞானிகள் எச்சரிப்பது என்ன…?

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு வேகமெடுத்து உள்ளது என்பதை பாதிப்பு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுக்கள் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களே விளக்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் வகையில் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கும் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதற்கிடையே, விஞ்ஞானிகள் பருவகால நோய் தொற்றாகவும் இது மாறும் என எச்சரிக்கை விடுக்கின்றனர். அதாவது குளிர்காலங்களில் இதனுடைய தாக்கம் அதிகமாகும் என குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் பருவமழை ஜூன் மாதம் தொடங்கும். தற்போதைய நிலவரப்படி வைரஸ் பரவல் தொடர்ந்தால் 2-வது அலை என்ற எச்சரிக்கை வெகுவாகவே எழுகிறது.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை என்ன…?

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா இரண்டாவது அலைகளை காண வாய்ப்புள்ளது, மழைக்காலங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .

இதில் வைரசின் வீரியம் என்பதும் இந்தியா வைரஸ் பரவலை எவ்வளவு வேகமாக கட்டுப்படுத்துகிறது, ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நிலைமை எப்படியிருக்கும் என்பதை பொறுத்தே இதனுடைய தாக்கம் (இரண்டாவது அலை) இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி நகரத்தில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல்துறை பேராசிரியர் சமித் பட்டாச்சாரியா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள விரிவான விளக்கத்தில், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து செல்கிறது என்பது தெரிகிறது. இறுதியில் இது சில வாரங்களிலோ அல்லது மாதங்களில் கீழ்நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது. இருப்பினும், அதே கொரோனா வைரஸின் புதிய பாதிப்பு எழுச்சியை எதிர்க்கொள்ளலாம். இது இரண்டாவது அலை என்று கருதப்படும்.

இரண்டாவது அலை என்பது ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மழைக்காலத்தில் வரக்கூடும். இருப்பினும், பாதிப்பு உச்சம் என்பது சமூக விலகலை எவ்வாறு கட்டுப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. கடந்த சில நாட்களில் புதிய பாதிப்புகளை பார்க்கும்போது, புதியதாக தினசரி நோய்த்தொற்றின் வளர்ச்சி முந்தைய கட்டத்தைவிடவும் மிகவும் மெதுவாக இருப்பதாக தெரிகிறது. இது வளர்ச்சி வளைவின் பீடபூமியில் (கீழிருந்து மேல்நோக்கி சென்று மீண்டும் கீழ்நோக்கி சரிவது)நாம் அடைந்திருக்கலாம் என்பதை இது குறிக்கிறது.

சீனாவிலும் ஐரோப்பாவிலும் சமீபத்திய ஆய்வுகள் முந்தைய கட்டங்களிலிருந்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும் தொற்று வந்து உள்ளது என தெரிவிக்கின்றன. எனவே, முந்தைய நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது அலையில் நோய்த்தொற்றில் வைரசுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த வகையில், ஒட்டுமொத்த மக்களும் ஓரளவுக்கு இரண்டாவது அலைக்கு பாதிக்கப்படக்கூடும் எனக் கூறியுள்ளார்.

வைரசுக்கு எதிரான தடுப்பூசி வருகிறவரையில், நாம் விழிப்புணர்வுடன் இருந்தாக வேண்டும். நாட்டில் அங்கும் இங்குமாய் கொரோனா வைரஸ் தாக்குகிறபோது, அந்த பகுதியை, உள்ளூர் அளவில் நாம் தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சமூக இடைவெளியை பின்பற்ற செய்ய வேண்டும். மேலும், அடையாளம் காண சோதனைகளை செய்ய வேண்டும். அறிகுறிகளை பார்க்காமல் சோதனைகளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி. என்னும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசனும், சமித் பட்டாச்சாரியாவின் கருத்தை ஏற்றுள்ளார்.

ராஜேஷ் சுந்தரேசன் தன்னுடைய கருத்தை பதிவு செய்கையில், ஊரடங்கை அடுத்து நாம் இயல்பான வாழ்க்கை முறைக்கு திரும்புகிறபோது, கொரோனா வைரஸ் தொற்று நோய்தாக்குதல் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது. பயணக்கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு தளர்த்திய பின்னரும் சீனா இதுபோன்ற நிலையை எதிர்க்கொண்டுள்ளது. தற்போது நாம் ஊரடங்கு காலகட்டத்தில் இருக்கிறோம்.

இது நமக்கு உரிய கால அவகாசத்தை தந்து இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் சோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். சிறப்பான சுகாதார நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும். நாம் எப்படியும் இவற்றை செய்ய வேண்டும். இவை செய்யப்படுகின்றன. எப்போது, எப்படி ஊரடங்கை நீக்க போகிறோம் என்பது கடினமான முடிவாக அமையும்.

இது பல கட்டங்களாக அமையப்போகிறது என்பதே தெளிவாக தெரிகிறது. பொது சுகாதாரத்தை மதிப்பிடுவதற்கு முடிவு எடுப்பவர்களுக்கு உதவுகிற கருவிகளை கொண்டு வருவதில், எங்கள் குழு முழுகவனம் செலுத்துகிறது. மழைக்காலத்தில், நமது நாட்டில் பல இடங்களில் காய்ச்சல் பரவது வழக்கமானது. எனவே, காய்ச்சல் அறிகுறியை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது.

அறிகுறிகளைப் பற்றி கவலைப்படாமல், தீவிரமாக பரவிய இடங்களில் (ஹாட் ஸ்பாட்களில்) நாம் சோதனைகளை அதிகரிக்க வேண்டியது முக்கியமானது. பாதிப்புக்கு உள்ளானோரை அடையாளம் காணுதல் அவசியமானது. அப்போதுதான் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்தலாம். இப்போது குறிப்பிடத்தக்க வகையில் கொரோனா வைரஸ் பரவலை கண்டுபிடிக்க சோதனைகள் நடந்து கொண்டிருக்கலாம். இருப்பினும் மக்கள் தங்கள் சுகாதாரம் குறித்து, மிகவும் கவனமாக இருப்பதால் நடத்தை மாற்றங்கள் இருக்கலாம். முக கவசங்கள் அணிவது பொதுவானதாகிவிடலாம். இதெல்லாம் இரண்டாவது அலை தாக்குகிறபோது அதை கட்டுப்படுத்த உதவலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை மற்றும் பெங்களூருவை முன்மாதிரியாக கொண்டு பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும், மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை தீவிரமாக கண்டுபிடிப்பதற்கும், உள்ளூர் மயமாக்குவதற்கும், பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்கும், புதிய தொற்றுகளை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ரால் பொது சுகாதார அச்சுறுத்தல் தொடரும் என்பது தெளிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் நேரத்தில், ஒவ்வொரு நகரத்திலும், கொரோனா வைரஸ் பரவல் அளவைப் பொறுத்து, பொது சுகாதார தேவைகள் ஏற்படும் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்து உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %